என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழிநடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1.
ஒரு வழியாய் எதரி ஓடி வந்தால்
எழு வழியாக துரத்திடுவீர் – எனக்காய்
2.
வறட்சி காலங்களில் திருப்தியாகி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் – எனக்காய்
3.
போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் – எனக்காய்
4.
நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே – எனக்காய்
5.
காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர் – எனக்காய்
6.
சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
புத்தியை தந்தீரே நன்றி ஐயா – எனக்காய்
7.
புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர் – எனக்காய்
8.
வற்றாத நீருற்றாய் ஓடச் செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர் – எனக்காய்
9.
என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்
ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர் – எனக்காய்